» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:53:01 AM (IST)

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் ஓராண்டுக்கு அதனை நாடு முழுவதும் கொண்டாடுவது என மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஹர்கர் திரங்கா எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல விசயங்கள் முன்னெடுத்து செல்லப்பட்டன. இதேபோன்று சமூக ஊடக முகப்பு பக்கத்தில் தேசிய கொடி இடம் பெற செய்யும்படி பிரதமர் மோடி மக்களை கேட்டு கொண்டார். உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இன்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், ஆகஸ்டு 15-ந்தேதி அன்று 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என தெரிவித்து உள்ளார்.

இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர் என கூறியதுடன், இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory