» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரபஞ்சத்தின் அழகான, அற்புதமான தோற்றங்கள் : புதிய படங்களை வெளியிட்டது நாசா!

புதன் 13, ஜூலை 2022 4:06:00 PM (IST)



பிரபஞ்சத்தின் அழகான, அற்புதமான தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 

பிரஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தை அறிவதற்கான முயற்சியிலிருக்கும் நாசா, விண்வெளியில் 10 பில்லியன் டாலர் (ரூ.79,000 கோடி) செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை(The James Webb Space Telescope) நிறுவியுள்ளது. இதன் மூலம் நாசா, பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஒளி ஆண்டுகளாக பயணப்பட்டு வரும் ஒளிக்கதிர்களைத் தொகுத்து புகைப்படமாக வெளியிட்டு வருகிறது.

அதன் முதல் படமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில்(Milky Way) சிதறிக்கிடந்த ஒளிகளை  ஒன்றிணைத்து புதிய வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டது. பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதால் தொலைநோக்கியில் 13 பில்லியன் ஆண்டுகள் வரையிலான கதிர்கள் பதிவாகி உள்ளதால் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பதை நெருங்கிவிட்டோம் என பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாசா மேலும் சில அற்புதமான படங்களை வெளியிட்டுள்ளது. இவையும் பிரபஞ்சத்தின் தோற்றத்திலிருந்து பயணப்பட்டு வரும் ஒளிக்கதிர்களாகும்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory