» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துப்பாக்கியால் சுட்டில் படுகாயம் அடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே உயிரிழப்பு!

வெள்ளி 8, ஜூலை 2022 3:24:20 PM (IST)



துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ஜப்பான்  நாட்டின் முன்னாள் பிரதமர் அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி ஜப்பானின் நாரா பகுதியில்  முன்னாள் பிரதமர் அபே இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென துப்பாக்கியால் அவரை மர்ம நபர் ஒருவர் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றனர். 

அங்கு அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடோவும் இதனைத் தெரிவித்திருந்தார். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அபேவுக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்தே அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே தகவல்கள் வெளிவந்தன. 

67 வயதான அபே ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர். உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் நடந்த இந்த அசம்பாவிதம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory