» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்ச்சையை கிளப்பிய காளி ஆவணப்படத்தை திரும்ப பெற கனடா இந்திய தூதரகம் வலியுறுத்தல்!

செவ்வாய் 5, ஜூலை 2022 12:11:40 PM (IST)



இந்து மத கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கி உள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் "ரிதம்ஸ் ஆஃப் கனடா" என்ற திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக காளி ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என ஒட்டாவா இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அண்டர் தி டெண்ட் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரையிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்து கடவுளை அவமதித்ததாக கனடாவில் உள்ள இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, டொராண்டோவில் உள்ள எங்கள் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பல இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

truthJul 6, 2022 - 02:30:53 PM | Posted IP 162.1*****

engal ooru kkali saarayam kudikkum. this fools wants to create problem to favor Brahmin Jamat Party. slaves.

kumar என்ற முட்டாள் அவர்களுக்குJul 6, 2022 - 08:05:43 AM | Posted IP 162.1*****

அந்த படத்தை தயாரித்தவர் இந்து தானே .. முட்டாள் உளறாதே

kumarJul 5, 2022 - 04:10:15 PM | Posted IP 162.1*****

Hindukkal endral ilchavaryagalaga poi vittathu ivargaluku...... ithu pondra padam edutha manitha mirugathai ellam vaalnal muluvathum sirayil adaikkavendum...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory