» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,100ஆக உயர்வு: 1,600 பேர் படுகாயம்

வெள்ளி 24, ஜூன் 2022 12:54:23 PM (IST)ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது. 

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பக்திகா மாகாணத்தைத் தாக்கிய 6.1 அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆகவும், அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,600 ஆகவும் உயர்ந்துள்ளது. பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, காயமடைந்தவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மேலும் சிலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளது. 

கயான் மற்றும் பர்மால் மாவட்டங்களைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் பக்திகாவின் குடியிருப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

கோஸ்ட் நகரத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரையிலும் உணரப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுக்கு உணவு, தங்குமிடம், கூடாரங்கள் தேவை என்று மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தலிபான் அரசு உடனடி உதவிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory