» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 250 பேர் பலி - பாகிஸ்தானிலும் 20பேர் உயிரிழப்பு!!

புதன் 22, ஜூன் 2022 5:06:57 PM (IST)



ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் நிர்வாகத்தின் இயற்கை பேரிடர் அமைச்சகத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் இறந்த நிலையில், 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோஸ்ட், நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory