» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இனி உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது: ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

வெள்ளி 17, ஜூன் 2022 11:51:02 AM (IST)இன்னும் 2 ஆண்டுகளில் உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது என்று ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா,100 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. கார்க்கிவ், மரியும்போல் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைகள், குண்டுகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஏரளாமான வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன.  

இந்த நிலையில் உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், ரஷ்ய எதிர்ப்பு திட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் முதலீடு செய்வதாக தெரிவித்தார். உக்ரைனை வைத்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் விளையாடி வருவதாகவும் அது விரைவில் முடிவுக்கு வரும் என்றும் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைன் உலக வரைபடத்தில் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே உக்ரைன் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory