» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவிடமிருந்து 50ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி: இலங்கை அரசு முடிவு!

வெள்ளி 17, ஜூன் 2022 10:37:26 AM (IST)

இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

அரிசி பற்றாக்குறையைப் போக்கவும், விலைவாசி உயா்வைத் தவிா்க்கவும் இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஏப்ரலில் ரசாயன உர பயன்பாட்டுக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்ததால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றிருந்தது. இலங்கைக்கு 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு, 3,500 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்ட பொருள்களை இந்தியா அண்மையில் அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory