» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை ...!

வியாழன் 16, ஜூன் 2022 5:04:35 PM (IST)

ரஷ்யாவில் போதைப்பொருள் வழக்கில் மாடல் அழகி ஒருவர் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். 

ரஷியாவைச் சேர்ந்த மாடல் ஏஜென்சி உரிமையாளரான 34 வயதான கிறிஸ்டினா துகினா. இவர் 2019 இல் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தை வென்று உள்ளார். 2020 இல் ரஷியா அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார்.

போதைப்பொருள் கடத்தியதாக துகினா ரஷியா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் அரை கிலோ மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. 2 குழந்தைகளின் தாயான இவர் மீது தற்போது சட்ட விரோதமாக போதைப் பொருளை கடத்துதல், விற்பனை செய்ததாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory