» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் : பாகிஸ்தான் அரசு வேண்டுகோள்

புதன் 15, ஜூன் 2022 4:59:35 PM (IST)

பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இலங்கையை போல பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. மானிய திட்டங்களை பாகிஸ்தான் ரத்து செய்வதால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. பண வீக்கம் அதிகரிப்பால் இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை மந்திரி அஷன் இக்பால் கூறும் போது, "பாகிஸ்தான் மக்கள் ஒரு நாளைக்கு ஓன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தேநீர் அருந்த வேண்டும். கடனை பெற்றே நாங்கள் தேயிலையை இறக்குமதி செய்கின்றோம். மின்சாரத்தை சேமிப்பதற்காக வணிக நிறுவனங்கள் முன்னதாகவே தங்கள் செயற்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான், உலகில் அதிக அளவு தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக விளங்குகிறது. 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் 640 மில்லியன் டாலர் மதிப்பில் தேயிலையை இறக்குமதி செய்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory