» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை : சீன அரசு அதிரடி உத்தரவு

வெள்ளி 16, ஜூலை 2021 3:48:26 PM (IST)



சீனாவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடை விதிக்கப்படும் என சீனா அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸானது சீனாவில் பரவு தொடங்கி இருந்தாலும், கட்டுப்பாடுகளை மேற்கொண்டதன் மூலம் அந்நாடு அதனை கட்டுப்படுத்தியது. 

இருப்பினும், ஆசிய நாடுகளில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதிக்குள், சுக்சியாங் நகர மக்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லை எனில், மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory