» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மேகன் மார்க்ல் கர்ப்பம்: இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி!!

திங்கள் 15, பிப்ரவரி 2021 11:12:19 AM (IST)இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறது.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச முறைப்படி 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். எனினும், இங்கிலாந்து அரசு மற்றும் அதிகாரம் மீது பற்றில்லாமல் இருந்த ஹாரி -மேகன் தம்பதி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது.

தற்போது தெற்கு கலிஃபோர்னியாவில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து ஹாரி -மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், "ஆர்ச்சி அண்ணனாக போகிறார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். Sussex -ன் இளவரசரும், இளவரசியும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க பேராவலோடு உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஒரு அழகிய பூங்காவில், கர்ப்பமாக இருக்கும் மேகன், தன் கணவர் மடியில் படுத்திருக்க, அவரது தலையை கணவர் ஹாரி அன்போடு ஏந்துவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "Duke இளவரசர், வேல்ஸ் இளவரசர் என்று ஒட்டுமொத்த அரச குடும்பமும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தவிர, ஹாரி - மேகன் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory