» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென்னாப்பிரிக்காவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கரோனா தடுப்பூசி நிறுத்தி வைப்பு

செவ்வாய் 9, பிப்ரவரி 2021 5:43:27 PM (IST)

தென்னாப்பிரிக்காவில் போதிய பலனளிக்காததால் ஆகஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கரோனா தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் கரோனா தடுப்பூசியை தொடர்ந்து, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் தென்ஆப்பிரிக்காவுக்கு 10 லட்சம் டோஸ்கள் வழங்கியது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் கரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதை தென்னாப்பிரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. லேசான கரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய கரோனாவுக்கு எதிராக போதிய பலன் அளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடர்வதற்கான சிறந்த வழி குறித்து விஞ்ஞானிகள் குழு ஆலோசனை வழங்கும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products


Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory