» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)
தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் z இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், அரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரியானா தேர்தலைத் திருடிவிட்டனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.
மக்களவை, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் திருடியதாக நாங்கள் ஆதாரங்களுடன் கூறினோம், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். கடைசி தருணம் வரை எங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை. பீகார் ஜென் z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள்.
இந்த வாக்குத் திருட்டு அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு உங்கள் நிலத்தை வழங்கவும், உங்கள் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கவும் இந்த வாக்கு திருட்டு நடத்தப்படுகிறது.நிதிஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மக்களை தொழிலாளிகளாக மட்டுமே வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் z இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்திருந்தார். நேற்று முன் தினம் அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ பிரச்சனையால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: உச்ச வரம்பை நிர்ணயித்த மத்திய அரசு!
சனி 6, டிசம்பர் 2025 5:34:06 PM (IST)

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)











மக்களேNov 7, 2025 - 08:59:36 PM | Posted IP 162.1*****