» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் ஹரியானா டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் காவல்பயிற்சி மைய ஐஜி பூரன்குமார்(52) அக்.7ம் தேதி தமது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். இந்த கடிதத்தை, டிஜிபி சத்ருஜித் கபூர், ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா ஆகியோருக்கு அவர் எழுதி இருந்தார்.
கடிதத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தம்மை ஜாதி ரீதியாக பாகுபாடு செய்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். இவரின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று இறந்துபோன பூரன்குமார் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமார், சண்டிகர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு சண்டிகர் ஐஜி புஷ்பேந்திரகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவின் கையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது முக்கிய நடவடிக்கையாக, டிஜிபி சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக, குற்றவாளிகள் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை உறுதி என்று முதல்வர் நயான் சைனி தெரிவித்து இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவினருக்கு ஆயுதங்கள் அளிப்பதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: திரிணமூல் எம்பி சர்ச்சை பேச்சு..!
திங்கள் 17, நவம்பர் 2025 11:13:22 AM (IST)

சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு : தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!
திங்கள் 17, நவம்பர் 2025 8:50:45 AM (IST)

அதானி ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இருந்து நீக்கம்!
சனி 15, நவம்பர் 2025 5:34:20 PM (IST)

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)








