» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!

திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)



பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறு சுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது' என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசைப் பாராட்டிப் பேசி வருகிறார். இது, தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சசிதரூர் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியை சசி தரூர் மீண்டும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது. ஆனால் அதற்கு அதிக ஆதரவு தேவை. இந்த முயற்சி உலக அரங்கில் இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டுகிறது. தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய மூன்றில் இந்தியாவின் செயல்பாடுகள் உலக அளவில் சிறந்ததாக வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சியாகும். தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அவசியமானது என்பதை நாங்கள் வெளிநாடுகளிடம் விளக்கினோம். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education





Thoothukudi Business Directory