» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)
ஆந்திராவில் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (62) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
தங்கம் வாங்காதீர்கள் என்பது அறிவுரை அல்ல, தோல்வியின் சான்று: பிரதமர் மீது ராகுல் சாடல்!
திங்கள் 11, மே 2026 4:39:29 PM (IST)

எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!
திங்கள் 11, மே 2026 11:00:45 AM (IST)

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா: கேரள திரையரங்குகளில் கண்டுகளித்த ரசிகர்கள்
திங்கள் 11, மே 2026 10:58:21 AM (IST)

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
ஞாயிறு 10, மே 2026 8:48:44 PM (IST)

திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு - தேவஸ்தானம் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 8:42:50 PM (IST)

அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)










