» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான விபத்தில் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 3:53:11 PM (IST)

விமான விபத்தில் உயிரிழந்த பா.ஜ.க. மூத்த தலைவர், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். விமானம் மதியம் 1.39 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.
இந்த விமானத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மனைவியை அழைத்து வர விமானத்தில் சென்றுள்ளார்.ஆனால், விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வெள்ளி 17, ஜூலை 2026 12:31:26 PM (IST)

நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவு இனி எளிது: புதிய அம்சங்களுடன் பீட்டா பதிப்பு அறிமுகம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:31:47 AM (IST)

தேசக் கட்டமைப்பிற்கு வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி புகழஅஞ்சலி!
புதன் 15, ஜூலை 2026 4:47:47 PM (IST)








