» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா புறப்பட்டனர்.
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான குழு இன்று (22/05/2025) ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த குழுவில், சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி ராஜீவ் ராய், பாஜக கட்சியை சார்ந்த எம்.பி கேப்டன் ப்ரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை - பிரியங்கா வலியுறுத்தல்
ஞாயிறு 15, ஜூன் 2025 11:19:04 AM (IST)

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 76,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
சனி 14, ஜூன் 2025 3:44:23 PM (IST)

மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதிய விபத்து : உயிரிழப்பு 274 ஆக உயர்வு
சனி 14, ஜூன் 2025 12:47:37 PM (IST)

விமான விபத்தில் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 3:53:11 PM (IST)

மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி: லண்டனில் குழந்தைகள் தவிப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 3:29:14 PM (IST)

விமான விபத்தில் இருந்து தப்பியது எப்படி? உயிர் பிழைத்த ஒரே பயணி பேட்டி!
வெள்ளி 13, ஜூன் 2025 3:16:36 PM (IST)

SURYAமே 23, 2025 - 02:09:35 PM | Posted IP 162.1*****