» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள்: உச்சநீதிமன்ற உத்தரவு மீது பா.ஜ.க. எம்.பி., அதிருப்தி!

ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:19:22 PM (IST)

உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என பாஜக எம்பி விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்ற  நீதிபதிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே என்பவர், மேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக உச்சநீதிமன்றத்தை சாடியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory