» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:40:04 PM (IST)

"மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் 1991-96 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜெயலலிதா வசித்த வீட்டில் சோதனை நடத்தியதில், தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த நகைகள், பொருட்கள் அனைத்தும் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நாகரத்னா, சதீஷ் சந்திரா அமர்வு உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, பிப். 14, 15ல் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory