» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த புரட்சித் தலைவர் : பவன் கல்யாண் புகழாரம்!

வெள்ளி 17, ஜனவரி 2025 5:36:32 PM (IST)



தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் எம்.ஜி.ஆர் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவை பாமரர்களின் ஊடகமாக்கிய புரட்சி நடிகராவார். 

புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாளில் தொலைநோக்கு கொண்ட அவரது தனித்துவமான நிர்வாகத்திறனையும், மக்களின் மேம்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த மாறாப்பற்றையும் எண்ணி வியக்கிறேன். மக்கள் பணியில் அவர் என்றும் எமது பேராசானாக, வழிகாட்டி நிற்கிறார். ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். என தெரிவித்துள்ளார் .


மக்கள் கருத்து

ஒரு கூத்தாடிJan 18, 2025 - 07:49:23 AM | Posted IP 162.1*****

ஒரு கூத்தாடி இன்னொரு கூத்தாடிகளை தான் புகழ்வாராம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory