» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிறுமி பலாத்காரம் செய்து கொன்ற வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை!
செவ்வாய் 12, நவம்பர் 2024 10:58:04 AM (IST)
5 வயது சிறுமியை கொன்ற வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்த போது, புகார் அளித்த சிறுமி தாயாரின் இரண்டாவது கணவரான தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே அவர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், போக்சோ, உள்பட 16 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு பத்தனம்திட்டா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் 2-வது கணவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பினை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், அது சட்டத்தின்படி வசூலிக்கப்படும் என்றும் கோர்ட்டு தெரிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 76,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
சனி 14, ஜூன் 2025 3:44:23 PM (IST)

மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதிய விபத்து : உயிரிழப்பு 274 ஆக உயர்வு
சனி 14, ஜூன் 2025 12:47:37 PM (IST)

விமான விபத்தில் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 3:53:11 PM (IST)

மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி: லண்டனில் குழந்தைகள் தவிப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 3:29:14 PM (IST)

விமான விபத்தில் இருந்து தப்பியது எப்படி? உயிர் பிழைத்த ஒரே பயணி பேட்டி!
வெள்ளி 13, ஜூன் 2025 3:16:36 PM (IST)

விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
வெள்ளி 13, ஜூன் 2025 11:00:47 AM (IST)
