» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது: பிரதமர் மோடி
சனி 9, நவம்பர் 2024 10:34:43 AM (IST)
ஜம்மு-காஷ்மீரில் எந்த சக்தியாலும் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என்று பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: மகாராஷ்டிரா (மகாராஷ்டிரா மாநில மக்கள்) ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் செய்த சதிகளை புரிந்து கொள்ள வேண்டும். நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது. மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது. அம்பேக்தரின் அரசியலமைப்பு மட்டுமே அங்கு செயல்படும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும், "காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கான திட்டத்தை (agenda) இங்கு முன்வைக்க வேண்டாம். காஷ்மீருக்காக பிரிவினைவாத மொழிகளை பேச வேண்டாம்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் பெருந்துயரம்: படகு கவிழ்ந்து பஞ்சாப் சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 3:59:52 PM (IST)

மும்பை விமான நிலையத்தில் 29 கிலோ தங்கம் பறிமுதல்: 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
சனி 11, ஏப்ரல் 2026 3:55:43 PM (IST)

கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:23:06 PM (IST)

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது உறுதி: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:05:47 PM (IST)

கேரளத் தேர்தல்: அரசுக்கு எதிராகக் கருப்புச் சட்டை அணிந்து சாண்டி உம்மன் போராட்டம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:53:42 PM (IST)







