» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

வெள்ளி 1, நவம்பர் 2024 12:20:10 PM (IST)

மொழிவாரி மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு மோடி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1956 நவம்பர் 1-ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை, அவர்களது மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, கேரளா, ஆந்திரா, கர்நாடாகா, மத்திய பிரதேச, அரியானா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துகளை அந்த அந்த மொழியில் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-தமிழ்நாடு, ஆந்திரா,சத்தீஸ்கார், சண்டிகர், டெல்லி, அரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, மற்றும் லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகிய மக்களுக்கு இன்று தனி மாநிலமாக உருவான நாள்.

பல மொழிகள், துடிப்பான கலாச்சாரம், வளமான வரலாறுகள் இந்தியாவின் வலிமையான இதயம். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, இந்த ஒற்றுமையைக் கொண்டாடுவோம்,பாதுகாப்போம் என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு வரை அரசு சார்பில் நவம்பர் 1 ஆம் தேதியே மாநில தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், ஜூலை 18 ஆம் தேதி, அதாவது மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அன்றே 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory