» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை!
வெள்ளி 1, நவம்பர் 2024 11:30:24 AM (IST)
நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது. புதிய விலை இன்றைக்கே (நவ.1) அமலுக்கு வந்தது.
புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,802 -க்கும், மும்பையில் ரூ.1,754.50-க்கும், சென்னையில் ரூ.1,964.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,911.50-க்கும் விற்கப்படுகிறது. இருப்பினும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)
