» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா-சீனா சிவில் விமான போக்குவரத்து: ஆசிய பசிபிக் மாநாட்டில் பேச்சுவார்த்தை!

வியாழன் 12, செப்டம்பர் 2024 4:16:49 PM (IST)



இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்து புதுடெல்லியில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கொரோனா காலகட்டத்தின்போது இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து துறையில் இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருநாடுகக்கு இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மந்திரி மாநாட்டின்போது, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர், சீனாவின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட ராம்மோகன் நாயுடு "இரு நாடுகளுக்கிடையிலான சிவில் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவையை விரைவாக தொடங்குதல் ஆகியவை தொடர்பாக சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory