» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

வியாழன் 5, செப்டம்பர் 2024 12:04:25 PM (IST)



சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார். தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அப்போது, சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரிகம், பண்பாட்டை வளர்க்கவும், பேணிக் காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையத்தை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory