» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மயிலை வேட்டையாடி, சமைத்து வீடியோ வெளியீடு: யூடியூபர் கைது!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 5:52:16 PM (IST)

தெலங்கானாவில் தேசிய பறவை மயிலை வேட்டையாடி, சமைத்து வீடியோ வெளியீட்ட  யூடியூபரை போலீசார் கைது செய்தனர். 

தேசிய பறவையான மயில் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி கொல்வது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். அப்படி இருந்தபோதிலும், சிலர் பொழுது போக்குக்காகவும், பிழைப்புக்காகவும் மயில்களை வேட்டையாடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டம், தங்கனபல்லிஎனும் கிராமத்தை சேர்ந்தவர் பிரணய் குமார். யூடியூபரான இவர்காட்டுப் பன்றி மாமிசம் சமைப்பதுஎப்படி? எனும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார். இதற்குவனவிலங்கு ஆர்வலர்களிடையே பலத்த எதிர்ப்பு எழும்பியுள்ளது.

பலர் யூடியூப் நிர்வாகத்துக்கு இ-மெயில் மூலமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட 2 வீடியோக்களையும் பிரணய் குமார் நீக்கிவிட்டார். இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து வீடியோ பதிவுகளை அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், தேசிய பறவையான மயிலை பிரணய் குமார் சட்டத்துக்கு புறம்பாக வேட்டையாடி, கொன்று, அதனை சமைப்பது எப்படி எனும் வீடியோவை கடந்த 3-ம் தேதி பதிவிட்டதால், அவர் மீது வனசட்டங்களின்படி தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டுமென சிலர் வனத்துறையினருக்கும், சிரிசில்லா போலீஸாருக்கும் புகார் அளித்தனர். 

அதன் பேரில் சிரிசில்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரணய் குமாரை கைது செய்தனர். இதுகுறித்து அம்மாவட்ட போலீஸ்எஸ்பி அகில் மஹாஜன் கூறு கையில், ‘‘பிரணய் குமார் வீட்டில் மீதமிருந்த மயில் கறியை பறிமுதல் செய்துள்ளோம். அவரது ரத்த மாதிரியையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

இதேபோன்று தெலங்கானாவை சேர்ந்த மற்றொரு சேனலும்வன விலங்குகளை கொன்று அதனை சமைப்பது குறித்த வீடியோவை தொடர்ந்து பதிவிட்டுவருகிறது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இது போன்று,வன விலங்குகளை வேட்டையாடுவது, கொல்வது, சமைப்பது சம்பந்தபட்ட 1,158 வீடியோ பதிவுகள் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory