» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இஸ்ரேல் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 5:27:46 PM (IST)
போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் செல்லும் அனைத்து விமானங்களும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. தற்போது, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டார். தொடர்ந்து, இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதி முகமது டெயிப் உயிரிழந்தார்.
ஈரான் நேரடி தாக்குதலில் ஈடுபடும் என்ற அச்சத்தால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.