» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ தாண்டியது

வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:47:00 AM (IST)

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ தாண்டியது.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று  வருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி பகுதியில் உள்ள முண்டக்கை, சூரல்மலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தென்னிந்திய மாநிலத்தின் மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்றாகும், மேலும் கடைசியாக 2020 இல் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 65 பேர் இறந்தனர்.

கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை(ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.

மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன. ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory