» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜ., ஆட்சியில் ரயில் விபத்துகள் தொடர்வது ஏன்? மம்தா கேள்வி

செவ்வாய் 30, ஜூலை 2024 3:40:48 PM (IST)

பா.ஜ., ஆட்சியில் ரயில் விபத்துக்கள் தொடர்கிறது. இதற்கு முடிவே இல்லையா?  என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில், மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர்.இது சோகமான நிகழ்வு.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நான் கேள்வி கேட்கிறேன்? இது தான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்த அரசின் அடாவடித்தனத்திற்கு முடிவே இல்லையா?. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory