» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நிலச்சரிவில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 30, ஜூலை 2024 12:08:49 PM (IST)
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவார்கள் என்று நம்புகிறேன். கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன். அ
வர்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். நானும் மத்திய அமச்சர்களிடம் பேசி, தேவையான உதவிகளை வழங்க கோரிக்கை விடுக்கிறேன். மீட்பு பணிகளில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.