» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புனேவில் சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி... பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

சனி 13, ஜூலை 2024 4:11:00 PM (IST)



புனேவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மராட்டிய அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன் விளக்கையும் பயன்படுத்தி வந்தார். மேலும் கூடுதல் கலெக்டர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் அறையை பூஜா ஆக்கிரமித்து கொண்ட தாகவும் புகார் எழுந்தது. இவர் மீதான புகார்களை தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவாசே கடிதம் அனுப்பினார். 

இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓ.பி.சி. இடஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க ஒருநபர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பூஜா கேத்கர் அளித்த ஆவணங்களையும், தேர்வு பெற்ற பிறகு அளித்த ஆவணங்களையும் அக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் பூஜா கேத்கர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தன.

இந்நிலையில், பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் கையில் துப்பாக்கியுடன் உள்ளூர் விவசாயிகளை மிரட்டும் புகைப்படைங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து பாட் போலீசார் பூஜாவின் பெற்றோர் திலீப் கேத்கர்-மனோரமா கேத்கர் மீது விவசாயிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory