» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜூன் 25-ந் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
சனி 13, ஜூலை 2024 8:57:33 AM (IST)
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ந் தேதி, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசியல் சாசனம் மீதும், அதன் வலிமை மீதும் இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, நெருக்கடி நிலை காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25-ந் தேதியை ‘அரசியல் சாசன படுகொலை நாள்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.எதிர்காலத்தில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க போவதில்லை என்று உறுதி பூணவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அப்பட்டமான சர்வாதிகார மனநிலையுடன் நெருக்கடி நிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தார். எந்த தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர் சிறையில் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ந் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் மனிதத்தன்மையற்ற செயல்களை எதிர்கொண்ட அனைவரும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை இந்த நாளில் நினைவுகூர்வோம்.ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய லட்சக்கணக்கானோருக்கு மரியாதை அளிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இதற்கிடையே, அரசியல் சாசன படுகொலை தின அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி கபட நாடகத்துடன் தலைப்புச்செய்தியில் இடம் பிடிக்க மேற்கொள்ளும் மற்றொரு முயற்சிதான் அரசியல் சாசன படுகொலை தின அறிவிப்பு.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அதனால் கடந்த ஜூன் 4-ந் தேதி மக்கள் அவருக்கு தார்மீக தோல்வியை அளித்தனர். மோடி, அரசியல் சாசனத்தையும், அதன் தத்துவங்களையும் தாக்குதலுக்கு உள்ளாக்கினார். 1949-ம் ஆண்டிலேயே அரசியல் சாசனத்தை சங்பரிவார் நிராகரித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் ஏன்? தமிழக காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 18, ஜூன் 2025 12:03:10 PM (IST)

இந்தியா- பாக்., மோதலில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை: பிரதமர் மோடி கருத்து
புதன் 18, ஜூன் 2025 11:55:34 AM (IST)

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர் : அறங்காவலர் குழு பரிந்துரை
புதன் 18, ஜூன் 2025 11:13:52 AM (IST)

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)

இந்தியன்Jul 13, 2024 - 11:23:03 AM | Posted IP 172.7*****