» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 12, ஜூலை 2024 12:15:15 PM (IST)
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறையின் பல்வேறு சம்மன்களை நிகராகரித்த பின்னர் கடந்த மார்ச் 21-ம் தேதி கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேஜ்ரிவால், அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கியது.
அதன்படி, தீர்ப்பின்போது நீதிபதிகள், "90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் ஒருவர் வெளியில் வருவதற்கும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பிணை கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அமலாக்கத் துறை கேஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.
வெறும் விசாரணைக்காக மட்டும் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் நம்புகிறோம். கேஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்.” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19ன் படி கைது செய்யப்பட்டது தவறானது என்று அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்தும், மதுபான கொள்கை ஊழல் நிதியை தேர்தலுக்கு பயன்படுத்தினால் என்ற அமலாக்கத் துறையின் புகார் குறித்தும் விரிவான அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:35:01 PM (IST)

ஏழை, நலிவுற்ற மக்களுக்காக சேவையாற்றியவர் போப் பிரான்சிஸ்! - பிரதமர் மோடி இரங்கல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 5:30:13 PM (IST)

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வருகை: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:13:02 PM (IST)

காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக உயர்வு: மீட்பு பணிகள் தீவிரம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள்: உச்சநீதிமன்ற உத்தரவு மீது பா.ஜ.க. எம்.பி., அதிருப்தி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:19:22 PM (IST)

போதைப்பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது
சனி 19, ஏப்ரல் 2025 5:36:38 PM (IST)
