» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய தூதருக்கு குருத்வாராவில் அனுமதி மறுப்பு: பிரிட்டனிடம் இந்தியா விளக்கம் கேட்பு

சனி 30, செப்டம்பர் 2023 5:15:27 PM (IST)



ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா விளக்கம் கேட்டுள்ளது.

பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, தன்னை குருத்வாராவுக்குள் சீக்கிய ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, அந்நாட்டு பிரதமர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரு நாட்டு நல்லுறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த நிகழ்வு நேரிட்டுள்ளது.

குருத்வாராவுக்குள் இந்திய தூதர் துரைசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உடனடியாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, குருத்வாரா நிர்வாகிகள், இந்நிலையில், இந்திய தூதர் துரைசாமியின் பாதுகாப்புப் பொறுப்பேற்றுக் கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம், ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய இந்திய தூதரை, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சீக்கிய ஆதரவாளர்கள் அனுமதி மறுத்ததன் பின்னணி குறித்து இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital









Thoothukudi Business Directory