» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நான் தப்பி ஓடவில்லை, விரைவில் உலகின் முன் தோன்றுவேன் - அம்ரித்பால் சிங்
வெள்ளி 31, மார்ச் 2023 4:54:18 PM (IST)
"நான் தப்பி ஓடவில்லை, விரைவில் உலகின் முன் தோன்றுவேன்" என்று காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்ரித்பால் சிங் மீது உள்ள வழக்குகள் காரணமாக அவரை போலீசார்ர் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை உண்மை என்று நம்ப வேண்டாம். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் உலகின் முன் தோன்றுவேன். தனியாக அல்ல; ஆதரவாளர்களோடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த அறிவிப்பை அடுத்து, அவர் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலிலோ அல்லது பத்திண்டாவில் உள்ள குருத்வாராவிலோ தோன்றக் கூடும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, இந்த இரண்டு பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும்: திக்விஜய் சிங் நம்பிக்கை
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:25:36 AM (IST)

ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு: கடைக்காரர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 30, நவம்பர் 2023 5:29:52 PM (IST)

கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம்: பயனர்கள் அதிர்ச்சி!!
வியாழன் 30, நவம்பர் 2023 5:24:35 PM (IST)

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல்: நடிகர்கள், பிரபலங்கள் ஓட்டுபோட்டனர்!
வியாழன் 30, நவம்பர் 2023 11:42:59 AM (IST)

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
வியாழன் 30, நவம்பர் 2023 10:26:34 AM (IST)

மாதந்தோறும் 5 கிலோ இலவச தானியம் திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
புதன் 29, நவம்பர் 2023 5:44:26 PM (IST)

ஆம்Mar 31, 2023 - 06:01:19 PM | Posted IP 162.1*****