» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர் இந்தியா வருகை: உற்சாக வரவேற்பு

புதன் 25, ஜனவரி 2023 11:38:04 AM (IST)



இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள எகிப்து அதிபருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்துகொள்கிறார். இதற்காக மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்து சேர்ந்தார். எகிப்து அதிபருடன் 5 மந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வந்துள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த எகிப்து அதிபருக்கு பாரம்பரிய நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. எகிப்து அதிபர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடக்கும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் எகிப்து அதிபர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். நாளை மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார். இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory