» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றம்தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது: கொலிஜியம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கருத்து!

புதன் 25, ஜனவரி 2023 10:31:24 AM (IST)

கொலிஜியம் விவகாரத்தில் அதிருப்தி அடைந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை என்று விமர்சனம் செய்தார். 

டெல்லி வக்கீல்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று  பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதிகளாக பதவியேற்ற பிறகு அவர்கள் தேர்தலில் சந்திக்க வேண்டியதில்லை. அல்லது பொதுமக்களின் கண்காணிப்பை எதிர்கொள்ளவேண்டியதில்லை. 

ஆனால் நீதிபதிகளையும், அவர்களின் தீர்ப்புகளையும், அவர்கள் தீர்ப்பு வழங்கும் விதத்தையும், அவர்களின் மதிப்பீடுகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சமூகவலைதள காலகட்டத்தில் எதையும் மறைக்க முடியாது. .1947 முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள அமைப்பு தொடரும் என்று நினைப்பது தவறாகும்.  நாடாளுமன்றம்தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory