» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அன்பு மிக்க இந்தியர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன் : தலாய் லாமா

வியாழன் 22, செப்டம்பர் 2022 5:31:19 PM (IST)

இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன்  என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரோடு, அவரது சீடர்களும், அரசு அதிகாரிகளும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அவர்கள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது பேசிய தலாய் லாமா, தனது மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை நினைவுகூர்ந்து விவரித்தார்.

"அடுத்த 15 - 20 ஆண்டுகள் நான் உயிரோடு இருப்பேன். அதில் கேள்விக்கு இடமில்லை. இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன். மாறாக, செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை. சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" இவ்வாறு மன்மோகன் சிங்கிடம் கூறினேன் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

makkalSep 24, 2022 - 12:06:32 PM | Posted IP 162.1*****

Only cheaters are converting to christians

அடேய்Sep 23, 2022 - 10:05:50 AM | Posted IP 162.1*****

உனக்கு சசிகலா குரூப் பத்திலாம் தெரியல.. விஜயகாந்துக்கு செய்வினை வச்சு ஒன்னும் இல்லாம பண்ணது... ஜெயலலிதாவை செய்வினை வச்சு போட்டு தல்லுனது.. அதிமுக ஆட்டைய போட பாத்தது... இன்னும் நெறைய இருக்கு லிஸ்ட்ல... அன்பான மக்கள் இருக்காங்க... கிறிஸ்துவத்தில் மட்டும்... இந்துவில் ஆண்ட பரம்பரைகள் தவிர அனைவரும் அன்பானவர்கள்.... மற்றவர்கள் அனைவரும் கிரிமினல்கள்... குற்றம் புரிய பிறந்தவர்கள்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory