» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு திடீர் உத்தரவு

சனி 14, மே 2022 10:22:52 AM (IST)

வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ரஷியா உக்ரைன் போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் கடந்த சில நாட்களாக உலக அளவில் கோதுமை விலை ஏறி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி கோதுமை ஏற்றுமதி செய்பவர்கள், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து கோதுமைக்கான தொகையை பெற்றதற்கான கடிதத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory