» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன் 24, நவம்பர் 2021 4:15:23 PM (IST)

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நவம்பர் 29ந்தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பொருள்பட்டியலில் ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 19ந்தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த எதிர்க்கட்சி முதல்வர்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையை நிரந்தரப்படுத்த கோரி கடிதம் ஒன்றை தாக்கல் செய்தனர். குறைந்த பட்ச ஆதரவு விலை மசோதா எப்படி அமைய வெண்டும் என்று வரைவு மசோதா ஒன்றையும் தாக்கல் செய்தனர். அந்த மசோதாவை சட்டமாக்கினால் போதும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பேச்சாளர் ராகேஷ் டிகைத் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory