» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்களில் பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை : ரயில்வே அமைச்சகம் முடிவு

சனி 20, நவம்பர் 2021 11:28:49 AM (IST)

ரயில்களில் பயணிகளுக்கு உணவு விநியோக சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவல் இந்தியாவில் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்களில் எந்த நேரமும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டது. நாடு முழுவதும் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ரயில் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு நிறுத்தபட்டிருந்தது. தொற்று பரவல் காரணமாக ரயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வைத் தொடர்ந்து உணவு வழங்குவதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.) ரயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது. கரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு விநியோக சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory