» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய கட்டணம் நிர்ணயம்: அரசு அறிவிப்பு

வெள்ளி 19, நவம்பர் 2021 5:18:28 PM (IST)



கேரளாவில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்கான கட்டண விவரத்தை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

காற்று மாசைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின்சார  வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய  மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மின்சார  வாகனங்களுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ்  செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

அந்த வகையில், கேரளாவில்  மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்கான கட்டண விவரத்தை கேரள அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,   இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு ஒரு யூனிட்டு ரூ. 10 ம் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரரையில் யூனிட்டு ரூ.12 ம்,  மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு ரூ.15 ம் வசூலிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது 

கேரள அரசின் பொதுத்துறை அமைப்புகளான  கே.எஸ்.ஈ.பி   மற்றும் ஏ.என்.ஈ.ஆர்.டி ஆகியவற்றால் நடத்தப்படும் சார்ஜிங் பாயிண்ட்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் பொருந்தும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இந்தக் கட்டண நடைமுறை அமலில் இருக்கும் அதன்பிறகு தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதலாக 56 சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory