» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை: அமித்ஷா புகழாரம்

வெள்ளி 19, நவம்பர் 2021 4:53:13 PM (IST)

ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை" என அமித்ஷா பாராட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக  பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.  பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றும், தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக விமர்சித்தும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறி வருகின்றன. 

இந்த நிலையில்,  பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;- பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பு மூலம் தனது மிகச்சிறந்த அரசியற்திறனை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர்” எனக்குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory