» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது : போக்குவரத்து நிறுத்தம்!

வெள்ளி 19, நவம்பர் 2021 8:17:30 AM (IST)

கனமழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.  இதனையடுத்து திருப்பதி-திருமலை இடையேயான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கனமழை காரணமாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை இன்று வெள்ளம் சூழ்ந்தது. தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியுற்றனர். இதனையடுத்து திருப்பதி-திருமலை இடையேயான வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. பருவமழை காரணமாக தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்று, பல்வேறு மழை காரணிகள் உருவாகி, மாநிலம் முழுதும் தொடர்ச்சியாக கன மழை பெய்த வண்ணம் உள்ளது. ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கனமழை காரணமாக கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. தவிர பக்தர்கள் செல்லும் மாலைப்பாதை வழியாக மழைநீர் வழிந்தோடுவதால் கடந்த சில நாட்களுக்கு முன் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory