» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய அமைச்சர் தகவல்

வியாழன் 18, நவம்பர் 2021 3:47:30 PM (IST)

இந்தியாவில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட 2 டோஸ் செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 ‘டோஸ் ’ செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்ட நிலவரம் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

இந்தியாவில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 113 கோடியே 68 லட்சத்து 79 ஆயிரத்து 685 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோசாக 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 2-வது டோசாக 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோசாக போடப்பட்ட 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81-ல் இருந்து, 2-வது டோசாக செலுத்தப்பட்ட 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604-ஐ கழிக்கிறபோது அது 37 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 477 ஆகும். இதுவே முதல் ‘டோஸ் ’ போட்டவர்கள் எண்ணிக்கை ஆகும். எனவே ஒரு ‘டோஸ் ’ போட்டவர்களைக் காட்டிலும் 2-வது ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.

நாட்டில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் சாதனை, முதல் முறையாக ஒரு ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்’ என்ற ஒரு மாத கால பிரசாரத்தின் முடிவில் நாட்டில் தகுதி வாய்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory