» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: பிரியங்கா

திங்கள் 15, நவம்பர் 2021 9:47:15 PM (IST)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் என பிரியங்கா கூறினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. அந்த மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி அங்கு முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். 

அவர் அங்கு அனுப்ஷாகர் என்ற இடத்தில் நேற்று பேசினார்.அப்போது அவர், "உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். அதற்கு கட்சி தயாராகி இருக்கிறது. 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படும். பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிதான் களத்தில் போராடுகிறது. சமாஜ்வாடியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ அல்ல” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory