» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடியால் தேசத்தை காக்க முடியாது என்பதை மணிப்பூர் தாக்குதல் காட்டுகிறது: ராகுல் காந்தி

ஞாயிறு 14, நவம்பர் 2021 12:13:25 PM (IST)

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பிரதமர் மோடியால் இந்த தேசத்தை பாதுகாக்க முடியாது என்பதை காட்டுகிறது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். 

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதியான சூராசந்த்பூரில் நேற்று  அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  கர்னல் விப்லாவ் திரிபாதி.  அவரது மனைவி அனுஜா, 6 வயது மகன் அபீர் மற்றும் 4 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள், பிரிபாக் என்று அழைக்கப்படுகிற மக்கள் புரட்சிகர கட்சியை சேர்ந்தவர்கள், இந்த அமைப்பினர் தனி மாநிலம் கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வருபவர்கள் ஆவார்கள்.  பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பிரதமர் மோடியால் இந்த தேசத்தை பாதுகாக்க முடியாது என்பதை காட்டுகிறது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  மணிப்பூரில் ராணுவ வாகன அணி வகுப்பு மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பிரதமர் மோடியால் இந்த தேசத்தை பாதுகாக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது.  உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களின் தியாகத்தை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” எனப்பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory